Tuesday, October 19, 2010
கவர்ச்சிக்கு மாறினார் திஷா
ஷாஜி கைலாஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜேஷ் கே.வாசு இயக்கும் படம் ‘அச்சமின்றிÕ. படம் பற்றி அவர் கூறியது: கால்சென்டர்,
மொபைல் ஸ்டோர்களில் வேலை செய்யும் இளைஞர்கள் பெருகிவிட்டனர். இதில் நன்றாக சம்பாதிக்கின்றனர். அதே நேரத்தில் பலர் பெற்றோரை கவனிப்பதில்லை. காதல் வலைகளில் சிக்குகின்றனர். இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது.வழி தவறிப்போகும் ஹீரோ வேடத்தில் விநாயக் நடிக்கிறார். ‘தமிழ்ப்படம்Õ திஷா பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். மொபைல் ஸ்டோரில் வேலை செய்யும் பெண் வேடம் ஏற்கிறார். அங்கு அவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்காக எப்படி தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை சில பெண்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அது படத்தில் காட்சிகளாக வரும். இதன் ஷூட்டிங் சென்னை மற்றும் மலேசியாவில் 60 நாட்கள் நடக்கிறது. இதற்கு முன் திஷா பாண்டே ஹோம்லியாக நடித்திருந்தார். இப்படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறார்.