Friday, October 15, 2010
ரூ.1 கோடி சம்பளம் கேட்டேனா? : தமன்னா ஆவேசம்!
ரூ.1 கோடி சம்பளம் கேட்டதால் தமன்னாவை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்குகிறார்கள் என தகவல் வெளியானது. இது பற்றி தமன்னாவிடம்
கேட்டபோது அவர் கூறியது: தமிழில் கார்த்தியுடன் ‘சிறுத்தை', தெலுங்கில் அல்லு அர்ஜுன், நாக சைதன்யா படங்கள் என 3 படங்களில் நடித்து வருகிறேன். அடுத்து தமிழில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர், ராம் ஆகியோருடன் 2 படங்கள் உள¢ளன. இந்த படங்களின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. மொத்தம் 6 படங்களில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை கால்ஷீட் இல்லை.
இதற்கிடையில் சிலர் என்னிடம் கால்ஷீட் கேட்டார்கள். அவர்களிடம் என்னுடைய சூழலை சொன்னேன். ‘ஜனவரியிலாவது கால்ஷீட் கொடுங்கள்Õ என்றனர். ‘அதுவும் முடியாதுÕ என்றேன். இதை மனதில் வைத்துக்கொண்டு 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள். நான் யாரைப் பற்றியும் தவறாக கூற விரும்பவில்லை. ஒரே நாள் இரவில் நான் ஹீரோயின் ஆகிவிடவில்லை. கஷ்டப்பட்டு நடித்து, படிப்படியாக முன்னேறிதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.