Saturday, November 6, 2010
ஹீரோயினே இல்லாமல் ஒரு படம்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது வித்தியாசம் என்ற பெயரில் எதையாவது வித்தியாசமாக செய்து அசத்துவார்கள். பாடல்களே இல்லாத படம், காதலே
இல்லாமல் காதல் என்பது அவற்றில் சில.
அந்த வரிசையில் தற்போது ஹீரோயினே இல்லாமல் ஒரு படத்தை எடுக்கின்றனராம். முற்றிலும் ஆண்களே இப்படத்தில் நடிக்கப் போகிறார்களாம். அதேபோல ஹீரோவும் படத்தில் கிடையாது.
சாய்குமார்தான் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கப் போகிறார். இவர் தவிர ஆசிஷ் வித்யார்த்தி, காதல் தண்டபாணி என நாற்பது, 50 வயதைத் தாண்டியவர்கள்தான் முக்கிய கேரக்டர்களில் வரவுள்ளனர்.
படத்திற்குப் பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. தமிழ் சினிமாவில் ஹீரோயின் இல்லாமல் உருவாகும் முதல் படம் இது என்கிறார்கள். படத்தை இயக்கப் போவது ரமணா. சுப்பாரெட்டி தயாரிக்கிறார்.
ஹீரோயின் இல்லை என்றாலும் படத்தில் குத்துப் பாட்டு ஏதாவது இடம் பெறலாம் என்று தெரிகிறது. இல்லாவிட்டால் ரசிகர்களுக்கு பெரும் சலிப்பாகி விடும் என்பதால் அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஹீரோயின் இல்லாமல் படம் எடுப்பது வித்தியாசமானதுதான். அதேசமயம், கதையிலும் வெயிட் அதிகம் இருந்தால்தான் படமும் சிறப்பாக வரும் என்பதால் அதற்கேற்ப கதையை வலுவாக்கியுள்ளனராம்.
எல்லாம் சரி, கதையே இல்லாமல் பல படங்கள் வருகிறதே, அதுவும் கூட வித்தியாசம்தானா?