Saturday, November 6, 2010
ஆஸ்திரேலிய பேய்களும் அழகி ஜெனிலியாவும்
பேய்வீடு கேள்விப்பட்டிருக்கிறோம், பேய் ஓட்டல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜெனிலியாவைக் கேளுங்கள், கண்களில்
மிரட்சியுடன் ஒரு பத்து ரீல் கதையையே உங்களுக்குச் சொல்வார்.
இந்திப் பட ஷூட்டிங்குக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தார் ஜெனிலியா. நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அறையின் சுவர்களில் திகிலூட்டும் படங்கள் வரையப்பட்டிருந்தது.
நேரம் செல்லச் செல்ல அறையில் மர்மக் குரல் ஒன்று கேட்கத் தொடங்கியது. முதலில் ஏதோ மனபிராந்தி என்று நினைத்தவர், விடாமல் சத்தம் கேட்கவே அறையை விட்டு வெளியே ஓடிவந்திருக்கிறார்.
அவரைப் போலவே நிறைய பேர் இந்த மர்மக் குரலைக் கேட்டு ஓடிவந்தனராம். பிறகென்ன, வேறு ஓட்டலுக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டார் அம்மணி.