Saturday, November 6, 2010

பக்குவப்பட்ட தனுஷ் : பாராட்டு டைரக்டர்


தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கம் “உத்தமபுத்திரன்” படத்தில் தனுஷூக்கு பெரிய அளவில் வசன காட்சிகளே கிடையாதாம்.


காரணம் படத்தில் பாக்யராஜ் உள்ளிட்ட இரண்டு டஜன் நடிகர்கள் இருப்பதால் ஒரு காட்சியில் ஒருத்தருக்கு ஒரு வரி டயலாக் என்றாலும் கூட ஒவ்வொருவரும் ஒரு வரி பேசி முடித்தாலே அந்த காட்சி முடிந்து விடும் என்கின்ற தனுஷ், நிறையவே பக்குவப்பட்டிருக்கிறார் என்கிறது கோலிவுட்.


இது ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் தனுஷோ இயக்குநர் ஜவஹரை பாராட்டோ பாராட்டு என்று பாராட்டுகிறார். கூடவே இயக்குநர் மித்ரன், ஜவஹரிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேனோ அதை அவர் மிகச் சரியாக செய்து விடுவதால் தான் நானும் அவரும் “யாரடி நீ மோகினி”, “குட்டி” ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் இணைந்திருக்கிறேதம்.

இயக்குநர்களுக்கும் ஹீரோவுக்கும் ஒரு படம் ஆரம்பமாகி அந்தப்படம் முடிவதற்குள்ளாகவே முட்டிக் கொள்ளும் கோலிவுட்டில் நாங்கள் இருவரும் தொடர்ந்து மூன்றாவது படம் செய்வதற்கு காரணம் மித்ரனின் திறமை தான் எனும் தனுஷ், நான் நடிக்கவருவதற்கு முன்பிருந்தே சுமார் 8 வருட காலங்களாக மித்ரனை அவர் உதவி இயக்குனராக இருந்த போதிருந்தே தெரியும் என்பதால் எங்கள் கூட்டணி தொடர்கிறது என்கிறார்…!!